பிறந்த தோட்டமா? அல்ல, எனது இந்த நந்தவனமா?

எங்கோ படித்த நினைவு. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும். இந்த மல்லிகையும் அவ்வாறே மணம் வீசியது. தோட்டம் மட்டும் தான் மாற்றானது. ஆனால், அதில் பூத்து குலுங்கும் மல்லிகையோ, எனக்கு மட்டுமே சொந்தமானது. இத்தனை வருடங்களாய் இந்த மல்லிகையை அதன் பிறந்த வீட்டில் பதியம் வைத்திருந்தேன். அணுதினமும் அந்த கொடிக்கு மறவாமல் நீர் தெளித்து, பாதுகாத்து வளர்த்து வந்தேன். இன்றோ, நேரம் நெருங்கி விட்டது. அங்கிருந்து அதை அப்படியே அந்த மண் சூழ பெயர்த்தெடுத்து வந்து எனக்கு […]