சந்திராயன்: பயணங்கள் முடிவதில்லை

இந்தியா மட்டுமல்ல, இந்த உலகமே கண் கொட்டாமல் காத்து கொண்டிருந்த தருணம் முடிந்து விட்டது. 

ஆம், 3,84,000 கிமீ சென்ற நாம், கடைசி 2 கிமீ நெருக்கத்தில் குழப்பத்தில் உள்ளோம். 

ஏன்?

விக்ரம் தரையிறங்கி நிலவில் கால் பாதிக்கும் தருனத்தில், அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் தரையிறங்கியதா? அல்லது, மன்னிக்கவும், விபத்துக்குள்ளானதா? 

இதற்கான விடை, இதுவரை யாருக்கும் தெளிவாக தெரியவில்லை. 

துரதிஷ்டவசமாக அங்கே என்ன நடக்கின்றது என்று அறிந்து கொள்ள அங்கே யாருமே இல்லை. 

ஒருவேளை ஆய்வுக்கலம் (orbiter) அதை படமெடுத்து அனுப்ப சாத்திய கூறுகள் உண்டா? அதனால் முடியுமா?

ஏன் முடியாது? 

நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொள்ளவே அது அங்கே சுற்றி கொண்டிருக்கிறது. அப்படியெனில் நிலவின் பரப்பில் இருக்கும் lander இருக்கும் நிலையை ஏன் படமெடுத்து அனுப்ப முடியாது?

எப்பொழுது முடியலாம், மீண்டும் நிலவை சுற்றி lander இருக்கும் இடத்திற்கு அது வரும் பொழுது. அல்லது, விஞ்ஞானிகள் அதை தன்னிச்சையாக கட்டுப்படுத்தி நகர்த்தும் பட்சத்தில் அது சாத்தியப்படலாம்.

ஆனாலும், இதை பற்றி விஞ்ஞானிகளிடம் விட்டு விடுவது தான் உத்தமம்.

எது எப்படியோ, ஆய்வுக்கலம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அங்கே இருந்த படியே வெற்றிகரமாக ஆய்வுகளை செய்த வண்ணம் இருக்கும். அந்த ஆய்வுகளின் தகவலை இங்கே இஸ்ரோ நிலையத்திற்கு அனுப்பி உபயோகமாக இருக்கும். 

விக்ரம் இது வரை அனுப்பிய தகவல்களை வைத்து இந்த தடங்கலுக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து நமது விஞ்ஞானிகள் மீண்டும் வெற்றி வாகை சூடுவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இது ஒரு இடைக்கால தடங்கலே என்று தெரிந்த போதும், இந்த தடங்கல் சிறிது மனதை உறுத்திக்கொண்டு தான் இருக்கிறது. 

வருத்தங்களுடன் உங்களிடமிருந்து விடைபெறுவது 
உங்கள் மகேஷ்