என்னை பற்றி

சிங்கார சென்னை, அட, அதான்பா நம்ப ஊரு.

அப்ப அப்ப ஏதாச்சம் தோணும். சரி, அதையும் தான் கிறுக்கி வைப்போமேன்னு தோணிச்சு. அப்படி தோன்றியது தான் இந்த பக்கம்.

முதலில் நான் எழுத துவங்கியது 2009 என்று நினைக்கிறேன். முதல் காதல் என்பது போல், அந்த முதல் எழுத்தையும் என்னால் மறக்க முடியவில்லை.

சுடாதே.

ஆம், இது தான் நான் முதல் முதலில் எழுதிய வலைப்பக்கம்.

எட்டு பாகங்களை நான் வெளியிட்டு, பின் பல நண்பர்களால் பெரிதும் பாராட்ட கேட்டு மகிழ்ந்திருந்தேன்.

புகழ் என்னும் போதை என்னை தாக்க, சரி அப்படியே தொடர்வோம் என்று நினைக்கும் போது வாழ்க்கையில் சில பல மாற்றங்கள். எழுதுவதை ஓரம் கட்டவும் முடியவில்லை, எழுதவும் முடியவில்லை.

அப்போது தான் எனது எண்ண குமுறல்களை வண்ணம் தீட்டி பக்கங்களாக வெளியிட தொடங்கினேன். அவ்வப்போது தோன்றும் கவிதைகளை பக்கங்களாக வெளியிட்டு ஒரு வடிகால் தேடி கொள்வேன்.

ஆண்டுகள் பல ஓடின. கவிதைகளும் சேர துவங்கின. சில ஆண்டுகளுக்கு முன் நான் அமெரிக்கா (அப்புறம் எப்படி நான் வெளிநாடு போனதை சொல்லுறது!!!) சென்றிருந்த போது, எனது நண்பர் ஒருவர் Amazon பற்றி உறைத்தார். அதன் காரணமாக நான் எனது எழுத்துக்கு புத்துயிர் கொடுக்க துவங்கினேன்.

என்னை எழுத்துலகில் பிறருக்கு அறிமுகம் செய்த எனது “சுடாதே” என்ற தொடரை புத்தக வடிவில் வெளியிட முயற்சிகள் மேற்கொண்டேன். அது வெளிவந்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பின், எனது கிறுக்கல்களை (அதான், எனது கவிதைகளை) தொகுத்து மற்றொரு புத்தகமாக வெளியிட்டேன்.

நீண்ட இடைவெளிக்கு பின், மூன்றாவதாக “உயிர் இலவசம்” என்ற புத்தகத்தை வெளியிட்டேன்.

இப்படியான எனது பயணம் நன்றாக சென்று கொண்டிருந்தது. அப்போது தான், எனக்கென்று ஒரே வலை அடையாளம் வேண்டுமென தனியே ஒரு கள பெயர் வாங்கி இன்று அதன் மூலம் உங்களுடன் உரையாடி கொண்டிருக்கிறேன்.

சரி, சரி.

காசா பணமா, அப்பிடியே வந்து படிச்சிட்டு போங்க. பிடிச்சிருந்தா, ரெண்டு வார்த்தை நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போங்க.

இல்லையா, பரவாயில்லை, திட்டாம போய்டுங்க. 🙂

இப்படிக்கு,

நூலாசிரியர்
மகேஸ்வரன் ஜோதி.