மகளே மகளே எம்மை ஈன்ற மகளே
என்னை
ஈன்றெடுத்த தாயே
குறிஞ்சியாய்
எங்கள் வாழ்வில்
மலர்ந்த மலரே
ஒவ்வொரு நொடியும் நீ
எங்களுடன் இருப்பினும்
இந்த நிமிடம் பெரியது
ஆம்.
பன்னிரண்டு வருடங்களுக்கு முன்
வந்தாயே
இந்நன்னாளில்
நீ
இந்த பூமியில்
மகளே
நன்னாளில்
நீ பிறக்கவில்லை
நீ பிறந்ததாலேயே
இந்நாள்
நன்நாள் ஆனது
இந்நாள்
வருடாவருடம்
எங்களுடன் வாழ்ந்து வரும்
கலியுக
கிருஷ்ணின் ஜெயந்தி
பரணி ஆளும்
மங்கையாய் நீ வாழ
தரணியே போற்றும்
நங்கையாய் நீ திகழ
நிறைந்த மனங்களுடன்
கனவுகளுடனும்
வாழ்த்தும்
உன் தாய் தந்தை